Homage to Comrade KKN Kutty
Date: 08/12/2022
Comrade KKN Kutty passed away at 9:30am.
மத்திய அரசு ஊழியர்களின் தொழில்சங்க இயக்க பிதாமகருக்கு கண்ணீர் அஞ்சலி
மத்திய அரசு ஊழியர்களின் மாபெரும் தலைவர் மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டார் .இதயத்தில் இடி விழுந்தது போல செய்தி வந்து விட்டது .அனுதாப செய்திகள் குவிந்து கொண்டு இருப்பதை படித்த போதிலும்கூட இம் மாமனிதர் இறந்து விட்டார் ,இந்த வினாடியில் அவர் நம்மிடையே இல்லை என்பதை இன்னும் நம்ப இயலவில்லை . வருமான வரி தொழில்சங்க இயக்கம் இந்த இழப்பை ஈடு கட்டவே இயலாது .தோழர் KKN குட்டி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி ஊழியர்கள் தொழில்சங்க இயக்கத்துக்கு தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் .இவரைப் போல் இன்னொரு தலைவரை இன்னும் பல தலைமுறைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் தொழில் சங்க இயக்கம் காண இயலாது . மிக மூத்த தலைவராக இருந்த போதிலும் காண்பதற்கும் பழகுவதற்கும் எளிமையானவர்.இயக்கத்தில் இருப்பவர்கள் யாவரும் எந்த உதவிக்காகவும் எளிதில் அணுகக்கூடிய அளவு அன்புடன் பழகக்கூடியவர் .நம்முடைய வருமான வரி ஓய்வூதியர் கூட்டமைப்பின் அகில இந்தியதலைவராக பொறுப்பில் இருந்தவர் .வருமான வரி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலசெயலாளர் என்ற முறையில் ஒவ்வொரு முற அவரை சந்திக்கும் போதும் அவரைப்பற்றிய மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போனது .இமயமே சரிந்து விட்டது போன்ற உணர்வு .நிரப்ப இயலாத மாபெரும் வெற்றிடம் உருவாகி விட்டது .தமிழ்நாடு வருமான வரி ஓய்வூதியர் இயக்கம் இந்த இழப்பை எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்று தெரியவில்லை .தாயை இழந்த குழந்தைகளைப் போல கண்கலங்கி கண்ணீர் பெருக்கி அனாதைகளாக நிற்கிறோம். ஈடு கட்ட முடியாத இந்த இழப்புக்கு தமிழ்நாடு வருமானவரி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நமது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்கிறோம் .இன்னும் பல நூறாண்டுகள் காலத்துக்கு தோழர் KKN நமது நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருப்பார் .அவர் பூத உடல் மறைந்து விடலாம் .அவர் புகழ் உடல் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் ?
மாபெரும் வீரர் ,மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் .
ML .பெருமாள்
வருமான வரி ஓய்வூதியர் சங்கம்
சென்னை
Comments
Post a Comment